Sunday, July 31, 2016

5

 4

7th August, 2016

அன்னை ஸ்ரீ மதுரகாளி அம்பாள்தான் சகலமும். எல்லா தோற்ற ங்களிலும் அவளேதான் உள்ளாள். மனசைச் செலுத்தி வணங்க ஒளியைக் காணலாம். அகந்தை கொள்ளும் அரக்கர்களை, இறங்கி வந்து ஓர் வடிவெடுத்து த்வம்சம் செய்ய, அழிக்கவும் தவற மாட்டாள். அன்னை என்று உலகுக்கு உணர்த்தவே இந்த செயல்கள். அம்பிகை ஸ்ரீ மதுரகாளி பார்வை சக்தியுடையது. அதான் ஸ்ரீ மதுரகாளியாக தோன்றினாள். அன்னை ஸ்ரீ மதுரகாளி நாமத்தை உச்சரிக்க உச்சரிக்க பாவம் தொலையும். அதிசயம் என்னவென்றால், அனைவரையும் அவரவர் தோற்றத்தில் இருந்த படி பக்தர்களின் மன ஓட்டம் எப்படி இருக்கும் என்பதைத் துல்லியமாக அறிந்தவள் அன்னை. வியப்பில் ஆழ்த்தும் இது போல ஆயிரம் கதைகள் சொல்லலாம். சன்னதியில் இருந்து பார்க்கும் போது அன்னை ஸ்ரீ மதுரகாளி அம்பாளின் காட்சி காண்போரை வியக்க வைக்கிறது. சாந்த கோலத்தில் தனிசன்னதியில் இருக்கிறாள். இவளை “ஸ்ரீ மதுரகாளிகாம்பாள்” என்று அழைக்கிறார்கள். அமுதைப் பொழிந்து கொண்டிருக்கிறாள். இதிலிருந்து என்ன தெரிகிறது. அம்பாள்தான் சகலமும். நல்ல மனத்தோடு கேட்கும் வரத்தைப் பூர்த்தி செய்பவள். அவள் இருந்தால் திருவருள் கிடைக்கும். அங்கு வரும் மகான்களுக்கு எந்தக் குறையும் இல்லை. தரிசனம் தரவில்லை என்ற கவலை இல்லை. பக்தியில் குறை வந்து விட்டதா என்ற கவலை இல்லை. சற்று நேரத்தில் தரிசனம் தந்து வாழ வைப்பவள். எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன். 

22nd July, 2016

அன்னை ஸ்ரீ மதுரகாளி சந்நிதிக்குள் நுழைந்தாலே போதும், கஷ்டத்தைக் கடந்து வர, கண்ணைத் தொறந்து பாரு, நன்கு தெரியும்; தயக்கத்துடன் குல வழக்கப்படி, அப்போதுதான் அம்பிகையின் மகிமையால் ஏதோ ஓர் அதிசயம் நடக்கப்போகிறது என்று பக்தர் நினைத்தார். மனக் குழப்பத்துடன் உணர்ச்சி வசத்தால் அம்பிகையின் பாதங்களில் தலை வைத்து வணங்கினார். சந்தேகங்களுக்கு உட்பொருள் விளங்காமல் தீர்வு காண நினைத்தார். யாதொரு கெடுதலும் வராது, புன்சிரிப்புடன் மனதார என்னை நம்பு, இதைப் புரிய வைக்க தீர்க்க தரிசனத்துடன் அவள் எழுந்தாள், உள்ளத்தில் விளக்கமளித்தாள். என்னப்பா வேணும், வேறென்ன கேக்கப்போறே, ஓர் அதிசயம். அனைத்து பாரங்களையும் நம்பிக்கையுடன் ஒப்படைத்துவிட்டு இருந்தால் நமக்கு நற்பயன் கிட்டும். அம்பிகை குழந்தைகளுக்கு, எதை எப்பொழுது எப்படி செய்ய வேண்டும் என்று அவளுக்குத் தெரியும். பக்தர்களின் எல்லா துயரங்களுக்கும் தீர்வளிக்கிறாள் என்பதுதான் நிதர்சனமான உண்மை. இயல்பான தர்ம சிந்தனை, அன்னை ஸ்ரீ மதுரகாளி கொடுத்திருக்கிற சவுகரியத்தோட வாழ கத்துக்கணும். அன்னையை துணையாகக் கொண்டவர்களுக்கு எந்த ஆபத்தும் வராது.


1st August, 2016 

தியானம்

களத்ரக்த முண்டாவலீ கண்டமாலா
மஹா கோரராவா ஸூதம்ஷ்ட்ரா கராளா |
விவஸ்ரா ச்மசானாலயா முக்தகேசீ
மஹாகாள காமகுலோ காளிகேயம் |
புஜே வாம யுக்மே சிரோஸிம் ததானா
வரம் தக்ஷயுக்மே பயம் வை ததைவ |
ஸூமத்யாபி துங்கஸ்தனா பாரநம்ரா
லசத்ரக்த ஸ்ருக்த்வயா ஸூஸ்மிதாஸ்யா | |
சவத்வந்த்வ கர்ணாவதம்ஸா ஸூகேஸீ
லஸத்ப்ரேத பாணிம் ப்ரயுக்தைக காஞ்சீ |
சவா காரமஞ்சாதிரூடா சிவாபிச்
சதுர்திக்ஷு சப்தாய மானபிரேஜே ||
விரஞ்சாதி தேவாஸ்த்ரஸ்தே குணாஸ்த்ரீம்
ஸமாராத்ய காளிம் ப்ரதானா வபூவூ:
அநாதிம் ஸுராதிம் மகாதிம் பவாதிம்
ஸ்வரூபம் த்வதீயம் ந விந்தந்தி தேவா :
ஜகன் மோஹனீயம் து வாக் வாதினீயம்
ஸூஹ்ருத் போஷிணீ சத்ரு ஸம் ஹாரனீயம்
வசஸ்தம்பனீயம் கிமுச்சாடனீயம்
ஸ்வரூபம் த்வதீயம் ந விந்தந்தி தேவா :
இயம் ஸ்வர்கதாத்ரி புன : கல்பவல்லீ
மனோஜாம்ஸ்து காமான்ய யதார்த்தம் ப்ரகுர்யாத்
ததாதே க்ருதார்த்தா பவந்தீதி நித்யம்
ஸ்வரூபம் த்வதீயம் ந விந்தந்தி தேவா :
ஸூராபானமத்தா ஸபக்தானுரக்தா
லஸத்பூத சித்தே சதாவிர்ப வஸ்தே
ஜபத்யான பூஜா ஸுதா கௌதபங்கா
ஸ்வரூபும் த்வதீயம் ந விந்தந்தி தேவா :
சிதானந்த கந்தம் ஹஸன்மன் மந்தம்
சரச்சந்த்ர கோடி ப்ரபாபுஞ்ஜ பிம்பம்
முனீனாம் கவீனாம் ஹ்ருதி த்யோதயந்தம்
ஸ்வரூபும் த்வதீயம் ந விந்தந்தி தேவா :
மஹாமேக காளீ ஸுரக்தாப சுப்ரா
கதாசித்விசித்ரா க்ருதிர் யோகமாயா
ந பாலா ந வ்ருத்தா ந காமாதுராபி
ஸ்வரூபும் த்வதீயம் ந விந்தந்தி தேவா :
க்ஷமஸ்வாபராதம் மஹாகுப்த பாவம்
மயா லோகமத்யே ப்ரகாத சாக்ருதம் யத்
தவ த்யான பூஜேன சாபல்ய பாவாத்
ஸ்வரூபும் த்வதீயம் ந விந்தந்தி தேவா :
யதி த்யானயுக்தம் படேத்யோ மனுஷ்யஸ்
ததா ஸர்வ லோகே விசா லோ ப வேச்ச
ம்ருஹே சாஷ்டஸித்திர் ம்ருதே சாபி முக்திஸ்
ஸ்வரூபும் த்வதீயம் ந விந்தந்தி தேவா : 


2nd August, 2016 

ஓம் த்ரிசூல சந்த்ராஹிதரே !
மஹா சிம்ஹ வாஹினி !
மாஹேஸ்வரீ ஸ்வரூபேண
தேவி ஸ்ரீ மதுரகாளி நமோஸ்துதே
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

No comments:

Post a Comment