Friday, July 22, 2016

4

 4

22nd July, 2016

தினம் சோகங்கள், பந்தங்கள், பாசங்கள் சிக்க வைக்கும், மனம் அலைபாயும் சில நேரம். துன்பம் தொடர்ந்தாலும், வேண்டியதை எல்லாம் அருளுகின்ற, எந்நாளும், நாம் காணும் அன்னை ஸ்ரீ மதுரகாளி அருள்பெற்று வாழ்வோம். சம்சாரம், பாப கர்ம என்னும் இருளால் பாதிக்கப்படாமல் பிரகாசிக்க நமஸ்காரம் செய்கிறேன். ஞானம் ஏற்பட இந்த உலகமானது சிறப்பு வாய்ந்த அன்னை ஸ்ரீ மதுரகாளியால் காக்கப்படுகிறது. ஒப்பற்ற பேரின்ப ஒளியால் பிரகாசிக்கிறது. உனது பாதத்தையே நம்பியிருக்கும் என்னை காக்க வேண்டும். என்னிக்கானும் ஒருநாள் நிச்சயம் நல்ல தெய்வ பக்தி சாதிக்கும்.

25th July, 2016

ஸ்ரீ மதுராம்பிகையம்மாயைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், இக சுகங்களையும் கொடுத்து, மோக்ஷத்தையும் கொடுப்பாள் என்பதே உண்மை. நல்லபடியாக வாழ ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்யுங்கள். ஒருநாள் என் கனவில் வந்தாள். நலமா என்றாள். எனக்கான நேரத்தை முடிவு செய் என்றேன். தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை என்றேன். கலகலவென சிரித்தாள். காட்சி அளிக்கிறாயே என்று என்னுள் தோன்றியது. எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.

26th July, 2016

கலியுகத்திலே தான் வந்து அவதரித்தது தன்னுடைய சங்கல்பத்தினாலே என்று அழகாக எடுத்துக் காட்டுகிறாள். அவதார பிரயோஜனம் துஷ்டர்களை சிக்ஷிப்பதற்கும் பக்தர்களை, ஒரு நிஜ பக்தனுக்குக் கெடுதல் ஏற்பட்டால் ரக்ஷிப்பதற்கும் என்கிறாள். நிதர்சனமாக எடுத்துக் காட்டுகிறாள். உன் துணை நாடி வந்தால் தாயே துயரங்கள் வந்தாலும் உந்தன் பார்வையாலே போக்கி அருளிடுவாய், காத்திடுவாய் நீயே. வாய் திறந்து அழைத்திடும் முன் உன்னருளை தருவாய் நீயே உன் பிள்ளை என்னை காத்திடு. தியானம் நம் லக்ஷியம். அன்னை ஸ்ரீ மதுரகாளி அம்பாளை, பிரதி தினமும் விச்ராந்தியாக தியானம் செய்யப் பழகவேண்டும். பக்தி உபாஸனை, தியானம் எல்லாம் ஒன்றுக்கொன்று விரோதமில்லை. நிறைய அநுஷ்டானங்களைச் செய்து கொண்டேயிருக்க வேண்டும்.

27th July, 2016

கண்ணை கவரும் சிறுவாச்சூர் (அன்னை குடி கொண்டு இருக்கும் தலம்) சுந்தர மதுர மாகாளி மீது பக்தி நமக்கு இருக்கவேண்டும். எனக்கு நீதாம்மா எல்லாமே என்று சரணாகதி அடையவேண்டும். கண்களை மூடி அனுதினம் ஆழ்ந்த தியானம் இருந்து பொன்னான நகைகள் சூடும் அம்பிகையின், ஒரு தாயைப் போல், நாமங்களைக் கூறிக் கொண்டு, மலர் கொண்டு அர்ச்சித்து, தற்போது எல்லா சாஸ்த்ரங்களும் அறிந்த சில பக்தர்கள் வழிபாடுகளில் சுயநலமின்றி உலக நடப்பையும் தெரிந்து கொள்ளாமல் வாழ்கிறார்கள். வெளியே போகவே வேண்டாம். பிரத்யட்சமாக அருளைத் தந்து அறியாமை விலகி வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகளெல்லாம் கிடைக்கச் செய்வாள். அகில புவனங்களையும் படைத்தும், காத்தும் விளையாடும் அந்த ஆதி பராசக்தி சிறுவாச்சூர் சுந்தர மதுர மாகாளி. சௌந்தர்யமான மதுரகாளி உருவம். தன்னை வணங்குபவர்களின் துன்பம் நீக்கி இன்பம் அளிக்கும் ஸ்ரீ சுந்தர மதுரகாளி அந்த பராசக்தி. அன்னை காளி என்றாலும் சாந்த ரூபத்தில் அன்னையை தரிசித்தவுடன் நம் பாவமெல்லாம் விலகுகின்றன. இப்புராதன ஆலயம் அரசினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய் தீது நன்மையெல்லாம் – நின்றன் செயல்களின்றி இல்லை போதும் இந்த மாந்தர் வாழும் பொய்மை வாழ்க்கையெல்லாம் ஆதி சக்தி தாயே – என் மீது அருள் புரிந்து காப்பாய். -- மஹாகவி பாரதியார். அம்மையின் அபிஷேக மஞ்சள் பெற்றால் தீராத வினை தீரும். பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு அக்குறை விலகும். அன்னையின் குங்குமம் பெற்றாலே முக்தி. அன்னைக்கு உகந்த வெள்ளிக் கிழமைகளிலே ஆயிரம் ஆயிரமாம் பக்தர் கூட்டம் அலை கடல் என பொங்கி வந்து அன்னையை பணிகின்றனர். அதுவும் ஆடி மற்றும் தை வெள்ளிகளில் அன்னையை தரிசிக்கும் அன்பர் பல கோடி. தாங்களும் எல்லா நலமும் வளமும் பெற சிறுவாச்சூர் சுந்தர மதுர காளிகாம்பாளை வந்து தரிசனம் செய்து தான் பாருங்களேன் கேட்ட வரம் தருவாள் அம்மன்.

No comments:

Post a Comment