Monday, February 13, 2017

8

 
 7
13th February, 2017

பல உறவுகள் இப்புவியில் நீ அளித்து இருந்த போதும்

முழு உறவென உனைக் கொண்டேன் ஸ்ரீ மதுரகாளி அன்னையை

ஊழ்வினை அழிப்பாய் உறவுண்ட கண்டனுக்கு இமையவளே சக்தி

நிறைவாக உறவுகள் பலவற்றை உலகினில் நீ தந்தாய் கனிவாக

அவை ஒவ்வொன்றும் நீயாகி உள்நின்று அன்பு செய்தாய் பலதாய் கருவினில்

பலப்பலவாய்ப் பிறந்தேன் ஒரு தாய் என்றென்றும் நீயெனெவே உணர்ந்தேன்

அனுதினமும் என்தாய் உன் பதங்கள் முழுதாய் சரணடைந்தேன்

பித்தனாய் எனதாய் உனை நினைந்து தினந்தினமுந் தொழுது நின்றேன்

என்பதை எண்ணிட எண்ணிட ஆனந்தம் பேரானந்தம் பரமானந்தம்.

Monday, September 5, 2016

7

 
 6
5th September, 2016 

அம்பாளின் பார்வை தனத்தையும் தான்யத்தையும் அளிக்க வல்லது. நவக்ரஹம் போன்ற எண்ணிலடங்கா கோள்களின் சுழற்சிக்கும் சூலத்தை கரங்களில் தாங்கிய அவள் பார்வை ஒன்றே போதும். பக்தன் முறையிட்டால், நம்முடைய வேதனையை அறிந்து, அதனைக் கேட்டு நேரிடும் துன்பங்கள் தீர்க்கின்றாள். முதலாவதாக அவள் மீது பக்தி நமக்கு இருக்கவேண்டும். ப்ரார்த்தனைக்காக தாமஸம் செய்யலாமா!! ஒரு சந்தர்ப்பம். கஷ்டம் வந்தாலும் ஒரே வைராக்யமாக மனஸைக் கெட்டிப்படுத்திக் கொள்ள வேண்டும். யாரையும் தண்டிப்பதில்லை. தாய்க்குமேல் தெய்வமில்லை, அவள் உத்தரவுக்குமேல் சாஸ்த்ரமில்லை என்று சாஸ்த்ரமே சொல்கிறது. எப்படியாவது நம்மை காத்து ரட்சிக்க வேண்டும் என்பதே அவளின் எண்ணம். அவள் பொற்பாதம் பணிந்து, எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திககிறேன்.


 10 th September, 2016
அம்பிகை ஸ்ரீ மதுரகாளி எப்போதும் புன்சிரிப்புடன் கூடிய முகம் உடையவள். தன்னை ஸ்தோத்ரம் செய்வதை விரும்புபவள். தன்னை பூஜிப்பவரை விரும்புபவள். நாம் தவறு செய்தால் மன்னிப்பளிப்பவள். அரவணைக்கக் கூடிய தன்மையுடையவள். யாவருக்கும் மங்களத்தையே தருபவள். உலகின் அன்னையாக இருந்து உலகைத் தாங்குபவள். அனைத்துக்கும் தாய், துணிச்சல் உடையவள். மிக்க புகழும் கீர்த்தியும் உடையவள்.
 

6

 5
5th September, 2016

தமிழ் நாட்டின் தனிப்பட்ட சிறப்பு அன்னை ஸ்ரீ மதுரகாளி கோயில். இந்தத் தமிழ் தேசத்தில் அவள் வேறெந்த ஸ்வாமிக்கும் இணை இல்லாத அளவுக்கு இடம் கொண்டு அருள் பாலித்து கருணை எனும் மழை பொழிகிறாள். பக்தர்களை ஒரேயடியாகக் கைதூக்கி உயர்த்தி விடுவதிலும் முதலாவதாக இருக்கிறாள். தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளத் தூண்டும் அன்னை. அன்னை ஸ்ரீ மதுரகாளி யிடம் பக்தி உண்டாகவேண்டும் என்று எப்போதும் பிரார்த்தனை செய்யுங்கள். அன்னையிடம் பூஜித்து அவள் அனுக்ரஹத்தைப் பெற்றுக் கொண்டால்தான் காரியம் விக்னமின்றி நடக்கும். அன்னை அனுக்ரஹம் இருந்தால்தான் காரியம் தங்கு தடையின்றி லோகத்தில் நடக்கும். அவளைப் ப்ரார்த்தித்து, பூஜை செய்து
நல்வாழ்வு வாழ்வோம். ஸதாகாலமும் நாம் மனதால் அவளை த்யானித்தால் அவள் ஓடோடி வருவாள். அவளை மனதில் இருத்தி வழிபடல் வேண்டும். ஸ்ரீசக்ரத்தின் அதி தேவதை. அவள் நாமாவுக்கு ஒரு சிறப்பு நம் அந்தராத்மாவில் உறைந்திருப்பவள். தினமும் முறைப்படி ஆத்மார்த்தமான பூஜையாலேயே கேட்டதும் உடனுக்குடனே நமக்கு அருள்பவள்.அன்னை அமர்ந்திருக்கும் அருகில் உற்சவ விக்ரகம் இருக்கும். அன்னையின் அழகு முகத்தைக் காணும் போதே மனம் குதூகலமடைகிறது. அன்னையின் திருமுகம் அப்படியே மனதில் பதிகிறது. அன்னையை தரிசித்த திருப்தி திரும்பும் போது துயரமெல்லாம் மெல்ல கரைந்து காணாமல் போவது போன்ற உணர்வும் மேலோங்குகிறது. பக்தர்களை லயித்து ஆனந்தம் அளிப்பவள். அம்ருதத்தைத் தாரையாக வர்ஷிப்பவள். சம்சார சாகரத்தில் வீழ்ந்து உழன்று கொண்டிருக்கும் பக்தர்களை கறையேற்றுபவள்.அம்பிகை துர்க்கா என்று பெயர் பெற்ற தேவி; அவளே வாராஹ அவதாரம் காளி. நம் உள்ளத்தில் பக்தியால் செய்யும் யாகத்துக்கும் அவளே காரணமாக இருக்கிறாள். நாம் மட்டும் குழந்தை இல்லை. தன் சக்தியால் பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கும் லோகத்துக்குக்கு தாயார். அன்னையின் ஆசியுடன் தரிசனம் பெற அம்பாள் உத்தரவுப்படி அம்மாவுக்கு பணி செய்து கொண்டிருந்தால் போதும்.
லோகத்தின் கஷ்டத்தைப் பார்த்து, அவர்களுடைய பூர்வ புணயத்திற்காக, நான் அனுபவப்பட்டவரையில், அன்னை வேண்டியதைச் செய்பவள். ஒரு வகையில் கோயில் பூசாரி தெய்வ ஆகர்ஷனம் உடையவர் என்பர். வலதுகை விரல்கள் உடுக்கின் தோல்பகுதியில் விரைந்து மோதும்போது ஒலி எழுப்பும் பேச்சின் நடுவே தொடர்ந்து பேசும் போது ஒரு லயம். மனிதமனத்துக்கு அமைதி தேடி செய்யபடும் ஒரு வகை சங்கீதக் கலை. ஆழ்ந்த நம்பிக்கையின் அடிப்படையில் அனுபவம். பக்தர்களின் நம்பிக்கை அன்னை ஸ்ரீ மதுராம்பிகை தன்னை தரிசிக்கும் பக்தர்களுக்கும் அனைத்து வளங்களையும் அளித்து ராஜயோகம் தருவாள் என்பது சத்தியம் அவள் பொற்பாதம் பணிந்து, எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.

Sunday, July 31, 2016

5

 4

7th August, 2016

அன்னை ஸ்ரீ மதுரகாளி அம்பாள்தான் சகலமும். எல்லா தோற்ற ங்களிலும் அவளேதான் உள்ளாள். மனசைச் செலுத்தி வணங்க ஒளியைக் காணலாம். அகந்தை கொள்ளும் அரக்கர்களை, இறங்கி வந்து ஓர் வடிவெடுத்து த்வம்சம் செய்ய, அழிக்கவும் தவற மாட்டாள். அன்னை என்று உலகுக்கு உணர்த்தவே இந்த செயல்கள். அம்பிகை ஸ்ரீ மதுரகாளி பார்வை சக்தியுடையது. அதான் ஸ்ரீ மதுரகாளியாக தோன்றினாள். அன்னை ஸ்ரீ மதுரகாளி நாமத்தை உச்சரிக்க உச்சரிக்க பாவம் தொலையும். அதிசயம் என்னவென்றால், அனைவரையும் அவரவர் தோற்றத்தில் இருந்த படி பக்தர்களின் மன ஓட்டம் எப்படி இருக்கும் என்பதைத் துல்லியமாக அறிந்தவள் அன்னை. வியப்பில் ஆழ்த்தும் இது போல ஆயிரம் கதைகள் சொல்லலாம். சன்னதியில் இருந்து பார்க்கும் போது அன்னை ஸ்ரீ மதுரகாளி அம்பாளின் காட்சி காண்போரை வியக்க வைக்கிறது. சாந்த கோலத்தில் தனிசன்னதியில் இருக்கிறாள். இவளை “ஸ்ரீ மதுரகாளிகாம்பாள்” என்று அழைக்கிறார்கள். அமுதைப் பொழிந்து கொண்டிருக்கிறாள். இதிலிருந்து என்ன தெரிகிறது. அம்பாள்தான் சகலமும். நல்ல மனத்தோடு கேட்கும் வரத்தைப் பூர்த்தி செய்பவள். அவள் இருந்தால் திருவருள் கிடைக்கும். அங்கு வரும் மகான்களுக்கு எந்தக் குறையும் இல்லை. தரிசனம் தரவில்லை என்ற கவலை இல்லை. பக்தியில் குறை வந்து விட்டதா என்ற கவலை இல்லை. சற்று நேரத்தில் தரிசனம் தந்து வாழ வைப்பவள். எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன். 

22nd July, 2016

அன்னை ஸ்ரீ மதுரகாளி சந்நிதிக்குள் நுழைந்தாலே போதும், கஷ்டத்தைக் கடந்து வர, கண்ணைத் தொறந்து பாரு, நன்கு தெரியும்; தயக்கத்துடன் குல வழக்கப்படி, அப்போதுதான் அம்பிகையின் மகிமையால் ஏதோ ஓர் அதிசயம் நடக்கப்போகிறது என்று பக்தர் நினைத்தார். மனக் குழப்பத்துடன் உணர்ச்சி வசத்தால் அம்பிகையின் பாதங்களில் தலை வைத்து வணங்கினார். சந்தேகங்களுக்கு உட்பொருள் விளங்காமல் தீர்வு காண நினைத்தார். யாதொரு கெடுதலும் வராது, புன்சிரிப்புடன் மனதார என்னை நம்பு, இதைப் புரிய வைக்க தீர்க்க தரிசனத்துடன் அவள் எழுந்தாள், உள்ளத்தில் விளக்கமளித்தாள். என்னப்பா வேணும், வேறென்ன கேக்கப்போறே, ஓர் அதிசயம். அனைத்து பாரங்களையும் நம்பிக்கையுடன் ஒப்படைத்துவிட்டு இருந்தால் நமக்கு நற்பயன் கிட்டும். அம்பிகை குழந்தைகளுக்கு, எதை எப்பொழுது எப்படி செய்ய வேண்டும் என்று அவளுக்குத் தெரியும். பக்தர்களின் எல்லா துயரங்களுக்கும் தீர்வளிக்கிறாள் என்பதுதான் நிதர்சனமான உண்மை. இயல்பான தர்ம சிந்தனை, அன்னை ஸ்ரீ மதுரகாளி கொடுத்திருக்கிற சவுகரியத்தோட வாழ கத்துக்கணும். அன்னையை துணையாகக் கொண்டவர்களுக்கு எந்த ஆபத்தும் வராது.


1st August, 2016 

தியானம்

களத்ரக்த முண்டாவலீ கண்டமாலா
மஹா கோரராவா ஸூதம்ஷ்ட்ரா கராளா |
விவஸ்ரா ச்மசானாலயா முக்தகேசீ
மஹாகாள காமகுலோ காளிகேயம் |
புஜே வாம யுக்மே சிரோஸிம் ததானா
வரம் தக்ஷயுக்மே பயம் வை ததைவ |
ஸூமத்யாபி துங்கஸ்தனா பாரநம்ரா
லசத்ரக்த ஸ்ருக்த்வயா ஸூஸ்மிதாஸ்யா | |
சவத்வந்த்வ கர்ணாவதம்ஸா ஸூகேஸீ
லஸத்ப்ரேத பாணிம் ப்ரயுக்தைக காஞ்சீ |
சவா காரமஞ்சாதிரூடா சிவாபிச்
சதுர்திக்ஷு சப்தாய மானபிரேஜே ||
விரஞ்சாதி தேவாஸ்த்ரஸ்தே குணாஸ்த்ரீம்
ஸமாராத்ய காளிம் ப்ரதானா வபூவூ:
அநாதிம் ஸுராதிம் மகாதிம் பவாதிம்
ஸ்வரூபம் த்வதீயம் ந விந்தந்தி தேவா :
ஜகன் மோஹனீயம் து வாக் வாதினீயம்
ஸூஹ்ருத் போஷிணீ சத்ரு ஸம் ஹாரனீயம்
வசஸ்தம்பனீயம் கிமுச்சாடனீயம்
ஸ்வரூபம் த்வதீயம் ந விந்தந்தி தேவா :
இயம் ஸ்வர்கதாத்ரி புன : கல்பவல்லீ
மனோஜாம்ஸ்து காமான்ய யதார்த்தம் ப்ரகுர்யாத்
ததாதே க்ருதார்த்தா பவந்தீதி நித்யம்
ஸ்வரூபம் த்வதீயம் ந விந்தந்தி தேவா :
ஸூராபானமத்தா ஸபக்தானுரக்தா
லஸத்பூத சித்தே சதாவிர்ப வஸ்தே
ஜபத்யான பூஜா ஸுதா கௌதபங்கா
ஸ்வரூபும் த்வதீயம் ந விந்தந்தி தேவா :
சிதானந்த கந்தம் ஹஸன்மன் மந்தம்
சரச்சந்த்ர கோடி ப்ரபாபுஞ்ஜ பிம்பம்
முனீனாம் கவீனாம் ஹ்ருதி த்யோதயந்தம்
ஸ்வரூபும் த்வதீயம் ந விந்தந்தி தேவா :
மஹாமேக காளீ ஸுரக்தாப சுப்ரா
கதாசித்விசித்ரா க்ருதிர் யோகமாயா
ந பாலா ந வ்ருத்தா ந காமாதுராபி
ஸ்வரூபும் த்வதீயம் ந விந்தந்தி தேவா :
க்ஷமஸ்வாபராதம் மஹாகுப்த பாவம்
மயா லோகமத்யே ப்ரகாத சாக்ருதம் யத்
தவ த்யான பூஜேன சாபல்ய பாவாத்
ஸ்வரூபும் த்வதீயம் ந விந்தந்தி தேவா :
யதி த்யானயுக்தம் படேத்யோ மனுஷ்யஸ்
ததா ஸர்வ லோகே விசா லோ ப வேச்ச
ம்ருஹே சாஷ்டஸித்திர் ம்ருதே சாபி முக்திஸ்
ஸ்வரூபும் த்வதீயம் ந விந்தந்தி தேவா : 


2nd August, 2016 

ஓம் த்ரிசூல சந்த்ராஹிதரே !
மஹா சிம்ஹ வாஹினி !
மாஹேஸ்வரீ ஸ்வரூபேண
தேவி ஸ்ரீ மதுரகாளி நமோஸ்துதே
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

Friday, July 29, 2016

ஆடி அமாவாசை

 4

22nd July, 2016

ஆகஸ்டு .02.08.2016 ல், ஆடி அமாவாசை வருவதை ஒட்டி, முன்னோர் வழிபாட்டு தலங்கள் இடம் பெற்றுள்ளன.

 ராமேஸ்வரம்: ராவணனை சம்ஹாரம் செய்த பாவம் தீர, ராமர் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம் ராமேஸ்வரம். இங்கு, ராமன் பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்தை ராமலிங்கம் என்றும், அனுமன் பிரதிஷ்டை செய்த லிங்கத்தை விசுவலிங்கம் என்றும் அழைக்கிறார்கள். காசியாத்திரை செல்வோர் இங்கு தீர்த்தங்களில் நீராடி, ராமநாதரை கங்கை நீரால் அபிஷேகம் செய்வர். கோவிலுக்குள் 22 தீர்த்தங்கள் உள்ளன. இங்குள்ள கடல் அக்னி தீர்த்தம் எனப்படுகிறது. பிதுர்தர்ப்பணம் செய்வோர் ஆடி அமாவாசையன்று ராமநாதசுவாமியை வழிபடுவர். இருப்பிடம்: மதுரையில் இருந்து 200 கி.மீ.,
தொலைபேசி: 04573- 221 223.

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காசிக்கு நிகரான தலமாக கருதப்படுகிறது. வைகை ஆற்றின் கரையிலுள்ள பிதுர்தலமான இதற்கு பிதுர் மோட்சபுரம் என்ற பெயருண்டு. அஸ்தி கரைத்தாலும், தர்ப்பணம் செய்தாலும் அவர்கள் நற்கதியாகிய பிறவாநிலை பெறுவர் என்பது ஐதீகம். அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோர் இங்கு வந்த போது, வைகைக்கரையிலுள்ள மணல் எல்லாம் சிவலிங்கம் போல் காட்சியளித்ததாம். இதனால் ஆற்றில் இறங்க அஞ்சி மறுகரையில் நின்றே வழிபட்டனர். அவர்கள் தரிசனம் பெறும் விதத்தில் நந்தியும் விலகி நின்றது.
இருப்பிடம்: மதுரையில் இருந்து 18 கி.மீ.,
தொலைபேசி: 94435 01761, 04575 265 082, 265 084.

கன்னியாகுமரி: முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் பகவதியம்மன் அருள்புரிகிறாள். பாணாசுரனின் கொடுமையால் வருந்திய தேவர்கள், அன்னை பார்வதியின் உதவியை நாடினர். பிரம்மாவிடம் வரம் பெற்ற பாணாசுரனை அழிக்க அம்பிகையே கன்னியாக வடிவெடுத்து தவத்தில் ஈடுபட்டாள். தவத்தால் பலம் பெற்ற அம்பிகை சக்ராயுதத்தை ஏவி பாணாசுரனை வதம் செய்தாள். வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்து மகாசமுத்திரம் ஆகிய மூன்றும் சங்கமிக்கு இங்கு பிதுர்தர்ப்பணம்
செய்வோருக்கு முன்னோர் ஆசி கிடைக்கும்.
இருப்பிடம்: மதுரையில் இருந்து 235 கி.மீ.,
தொலைபேசி: 04652- 246 223.

அழகர்கோவில் நுõபுர கங்கை: திவ்யதேசங்களில் ஒன்றான மதுரை அழகர்கோவிலில் கள்ளழகர் அருள்பாலிக்கிறார். பதினெட்டாம் படி கருப்பசாமி சக்தி மிக்கவர். அனுமன் தீர்த்தம், கருடதீர்த்தம், சக்கர தீர்த்தம், நுõபுர கங்கை ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. திருமால் உலகை மூன்று அடிகளால் அளந்த போது, அவரது சிலம்பு அணிந்த திருவடி வானம் நோக்கி சென்றது. அது கண்ட பிரம்மா தன் கலச நீரால் திருவடிக்கு அபிஷேகம் செய்தார். அந்த நீர் கங்கை போல் ஊற்றெடுத்தது. இதனால், இந்த தீர்த்தம் நுõபுர கங்கை என பெயர் பெற்றது. நுõபுர கங்கையில் நீராடி தர்ப்பணம் செய்வது சிறப்பு.
இருப்பிடம்: மதுரையில் இருந்து 25 கி.மீ.,
தொலைபேசி: 0452- 247 0228, 247 0229.

ஆனைமலை மாசாணி அம்மன்: பொள்ளாச்சி அருகிலுள்ள ஆனைமலை அடிவாரத்தில் ஆழியாற்றின் கரையில் மன்னன் நன்னனுக்குரிய மாமரம் இருந்தது. அந்த பழங்களை யாரும் பறிக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தான். ஒருநாள் ஆற்றில் நீராடிய இளம்பெண் மிதந்து வந்த மாம்பழத்தை சாப்பிட்டாள். அவளுக்கு நன்னன் மரண தண்டனை கொடுத்தான். அவள் மீது ஊரார் இரக்கம் கொண்டனர். அதுவே பக்தியாகி வழிபட்டனர். மயான சயனி என்பதே மாசாணி என மருவியது. உப்பாற்றின் கரையில் அம்மன் 17 அடி நீளத்தில் படுத்த நிலையில் காட்சி தருகிறாள். இவள் நீதி தெ#வமாக விளங்குகிறாள்.
இருப்பிடம்: பொள்ளாச்சியில் இருந்து 14 கி.மீ.,
தொலைபேசி: 04253- 282 337, 283 173.

திருச்செங்கோடு அர்த்தநாரி: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர் கோவிலில், சிவன் அம்பிகையை இடபாகத்தில் ஏற்ற நிலையில் அருள்புரிகிறார். இங்குள்ள செங்கோட்டு வேலவன் சன்னிதி சிறப்புமிக்கது. 1200 படிகள் கொண்ட மலைக்கோவிலான இங்கு உள்ள 60வது படி சத்தியப்படி எனப்படுகிறது. அந்தக் காலத்தில் வழக்குகளை இங்கு பேசித் தீர்க்கும் வழக்கம் இருந்தது. அர்த்தநாரீஸ்வரரின் திருவடியில் சுரக்கும் தேவதீர்த்தம் மகிமை மிக்கது. அமாவாசை நாளில் இந்த தீர்த்தத்தைப் பருகினால் உடல் நோய், மன நோய் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும் .
இருப்பிடம்: ஈரோட்டில் இருந்து 18 கி.மீ.,
தொலைபேசி: 04369-250 238.

அனுமந்தபுரம் வீரபத்திரர்: தட்சனின் யாகத்தை நிறுத்த, சிவன் தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பினார். சாகாவரம் பெற்ற தட்சனின் தலையை வீரபத்திரர் வெட்டினார். பிறகு, தன் கோபம் தணிய பூலோகத்தில் உள்ள அனுமந்தபுரம் வெற்றிலை தோட்டத்தில் தங்கி அமைதி பெற்றார். இத்தலத்தில் வீரபத்திரருக்கு கோவில் அமைக்கப்பட்டது. செவ்வாய்தோஷம், உடல்நோய் நீங்க ஐந்து அமாவாசை அல்லது ஐந்து பவுர்ணமி நாட்களில், இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, சுவாமிக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபடுகின்றனர். இருப்பிடம்: விழுப்புரம்- சென்னை சாலையில் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து 10 கி.மீ.,
தொலைபேசி: 044- 2746 4325.

பண்ணாரி மாரியம்மன்: பண்ணாரி வனப்பகுதியில் மேய்ந்த பசுக்கூட்டத்தில் ஒரு பசு மட்டும், அங்குள்ள வேங்கை மரத்தடியில் அடிக்கடி பாலைச் சுரந்தது. இதை அறிந்த மாடு மேய்ப்பவன் அந்த இடத்திலுள்ள புற்றின் அடியில், ஒரு அம்பாள் சிலை இருப்பதைக் கண்டான். விஷயமறிந்த ஊரார் அங்கு வந்த போது, ஒருவருக்கு அருள் வந்தது. பசுமை மிக்க இந்த இடத்தில் மாரியம்மனாக வீற்றிருக்கும் என்னை வழிபட்டால் வேண்டும் வரம் அளிப்பேன், என்று அம்மன் வாக்களித்தாள். அதன்படி கோவில் அமைத்து வழிபாடு செய்யத் தொடங்கினர். ஆடி செவ்வாய், வெள்ளி, அமாவாசை நாட்களில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. இங்கு புற்றுமண்ணே பிரசாதம்.
இருப்பிடம்: ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் வழியாக 77 கி.மீ.,
தொலைபேசி: 04295- 243 366, 243 442, 243 289.

தேவிபட்டினம் நவபாஷாண கடல்: ராமநாதபுரம் அருகிலுள்ள தேவிபட்டினம் கடலில், ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவபாஷாணம் என்னும் கற்களால் ஆன நவக்கிரகங்கள் உள்ளன. அமாவாசையன்று இந்தக் கடலில் நீராடி நவக்கிரகங்களை வழிபட்டால் கிரகதோஷம் அகலும் என்பது ஐதீகம். இங்குள்ள சக்கர தீர்த்தம் என்னும் தர்ம புஷ்கரணியில் நீராடினால் பாவநிவர்த்தி உண்டாகும். வீரசக்தி பீடமாக விளங்கும் இங்கு அம்பிகை மகிஷாசுரமர்த்தினியாக வீற்றிருக்கிறாள். புகழ் மிக்க மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரத்தால் போற்றப்படும் அம்பிகை இவளே. ராவணனுடன் போரிடும் முன் ராமர், லட்சுமணர், அனுமன் மூவரும் வெற்றி பெற இந்த அம்பிகையை வழிபட்டனர்.
இருப்பிடம்: ராமநாதபுரத்தில் இருந்து 15 கி.மீ.,

பவானி சங்கமேஸ்வரர்: ஈரோடு மாவட்டம் பவானியில், பவானி ஆறு காவிரிஆற்றுடன் கூடுகிறது. இங்குள்ள சங்கமேஸ்வரர் கோவிலில் அன்னை வேதாம்பிகை அருள்பாலிக்கிறாள். சம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலத்திற்கு திருநணா என்றும் பெயருண்டு. திருநணா என்பதற்கு பாவம் நெருங்காது என்பது பொருள். அதனால் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சிவதரிசனம் செய்வோருக்கு பாவம் நெருங்குவதில்லை என்பது ஐதீகம். காவிரி, பவானி, அமுதநதி கூடுவதால் பவானியை முக்கூடல் என்று சொல்வர். ஆடி மாதம் முழுவதுமே இங்கு நீராடி, சுவாமியை வழிபடுவது சிறப்பு.
இருப்பிடம்: ஈரோட்டில் இருந்து 15 கி.மீ.,
அலைபேசி: 98432 48588, தொலைபேசி: 04256- 230 192.

செதலபதி முக்தீஸ்வரர்: திருவாரூர் மாவட்டம் செதலபதி முக்தீஸ்வரர் கோவிலை தில தர்ப்பணபுரி என்று சொல்வர். அமாவாசையன்று செய்யும் தர்ப்பணத்தின் பெயரால் அமைந்த தலம் இது. திலம் என்றால் எள் என்று பொருள். இத்தலத்தில் ராமர் தனது தந்தை தசரதர், ஜடாயு இருவருக்கும் எள்ளால் தர்ப்பணம் செய்ததால் இப்பெயர் ஏற்பட்டது. முக்தி தருபவராக சிவன் இருப்பதால் முக்தீஸ்வரர் எனப்படுகிறார். அம்பிகை சுவர்ணவல்லித் தாயார் செல்வம் தருகிறாள். இங்குள்ள அரசலாற்றிலும், சந்திர தீர்த்தத்தில் நீராடி முன்னோர் வழிபாட்டை மேற்கொள்வர்.
இருப்பிடம்: திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ., தொலைவில் பூந்தோட்டம் கிராமம். இங்கிருந்து 4 கி.மீ.,
அலைபேசி: 94427 14055, தொலைபேசி: 04366- 238818, 239 700

அய்யாவாடி பிரத்யங்கிரா: அய்யாவாடியில் காளியின் அம்சமான பிரத்யங்கிராதேவி அருள்புரிகிறாள். இலங்கை போரில் வெற்றி பெறுவதற்காக ராமர் யாகம் செய்து இந்த தேவியை வழிபட்டார். சரபேஸ்வரரின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய இவள் சிங்க முகம், 18 கைகள், சிரித்த முகத்துடன் கரிய நிறத்தில் காட்சி தருகிறாள். எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபட, அமாவாசையன்று அம்மனுக்கு காலை முதல் மதியம் வரை நிகும்பலா யாகம் இங்கு நடக்கிறது. பழம், பட்டு, பூக்கள் என 108 திரவியங்களை சேர்ப்பர். யாக குண்டத்தில் மிளகாய் வத்தலை இட்டாலும் நெடி சிறிதும் இருக்காது.யாகம் நிறைவேறியதும், சரபேஸ்வரர், பிரத்யங்கிரா தேவிக்கு அபிஷேகம் நடக்கும்.
இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து 10 கி.மீ.,
தொலைபேசி: 94431 24347, 0435 246 3414.

பாபநாசம் பாபநாசநாதர்: நவகைலாயத் தலங்களில் முதல் தலம் பாபநாசம் பாபநாசநாதர் கோவில். தாமிரபரணியின் கரையில் அமைந்த இங்கு அகத்தியர் சிவபார்வதியின்திருமணக் கோல தரிசனம் பெற்றார். கருவறையின் பின்புறம் உள்ள பிரகாரத்தில் கல்யாண சுந்தரர் என்ற பெயரில் சிவபார்வதி திருமணக் கோலத்தில் உள்ளனர். இங்கு அம்பிகை உலகம்மையாக வீற்றிருக்கிறாள். கங்கை நதி தன்னிடம் சேரும் பாவத்தை ஆண்டுக்கு ஓருமுறை தாமிரபரணிக்கு வந்து நீராடி போக்கிக் கொள்வதாக ஐதீகம். பாபநாசநாதர் லிங்கம் ருத்திராட்சத்தால் ஆனது. ஆடி அமாவாசையன்று தாமிரபரணியில் நீராடி முன்னோர் வழிபாடு செய்வது சிறப்பு.
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து 50 கி.மீ.,
தொலைபேசி: 04634- 223 268

சொரிமுத்தையனார் கோவில்: சாஸ்தாவின் முதல் தலம் பொதிகை மலையில் உள்ள சொரிமுத்தையனார் கோவில். பூர்ணா, புஷ்கலா தேவியருடன் வீற்றிருக்கிறார். பாணதீர்த்தம் கோவிலில் இருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ளது. அம்பில் புறப்பட்ட பாணம் போல நீர் கொட்டுவதால் பாண தீர்த்தம் என பெயர் வந்தது. இந்த அருவியை தூரத்தில் இருந்து தரிசனம் செய்யலாம். (குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது) ஆடி அமாவாசையன்று பக்தர்கள் தாமிரபரணியில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்கின்றனர். அகத்தியர் அருவியிலும் நீராடி தர்ப்பணம் செய்யலாம்.
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் சொரிமுத்தையனார் கோவில் 54 கி.மீ.,
தொலைபேசி: 04634- 250 209

சுருளிமலை தீர்த்தம்: சுருளிமலையில் முருகன் குடி கொண்டிருக்கிறார். ஆண்டிகோலத்தில் சுவாமி காட்சியளிப்பதால் சுருளியாண்டி எனப்படுகிறார். இந்த மலையிலுள்ள கைலாச புடவு குகையில் சிவன் கைலாசநாதர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். குகையின் மேல்பகுதியில் முருகன் உள்ளார். சனீஸ்வரரின் பிடியிலிருந்து விடுபட தேவர்கள் இங்கு வந்து தவமிருந்தனர். முருகன் அவர்களை சனியின் பிடியில் இருந்து காத்தார். ஆடி அமாவாசையன்று சுருளிதீர்த்தம் அருவியில் நீராடி பிதுர்
தர்ப்பணம் அளிக்கின்றனர். இங்குள்ள பூதநாராயணப்பெருமாள் கோவிலில் விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.
இருப்பிடம்: தேனியிலிருந்து 40 கி.மீ.,
அலைபேசி: 93452 61022.

அச்சிறுபாக்கம் ஆட்சிபுரீஸ்வரர்: திரிபுர அ”ரர்களை அடக்க எண்ணிய சிவன் தேரில் புறப்பட்டார். அப்போது முதற்கடவுளான விநாயகரை வணங்க வேண்டும் என்ற நியதியை அவர் பின்பற்றவில்லை. எனவே, விநாயகர் தேரின் அச்சை முறித்தார். தவறை உணர்ந்த சிவன் விநாயகரை மனதில் தியானிக்க தேர் சரியானது. சட்டத்தை தெய்வமும் பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படையில் இந்த நிகழ்வு அமைந்தது. தேரின் அச்சு முறிந்த இடத்தை அச்சு+இறு(முறிந்த)+பாக்கம் என்று அழைத்தனர். இதுவே அச்சிறுபாக்கம் ஆனது. இங்குள்ள சிவன் ஆட்சிபுரீஸ்வரர் எனப்படுகிறார். இவரை அமாவாசையன்று வழிபட புதிய முயற்சி தடையின்றி நிறைவேறும்.
இருப்பிடம்: செங்கல்பட்டில் இருந்து 48 கி.மீ.
அலைபேசி: 98423 09534, தொலைபேசி: 044 - 2752 3019.

Friday, July 22, 2016

4

 4

22nd July, 2016

தினம் சோகங்கள், பந்தங்கள், பாசங்கள் சிக்க வைக்கும், மனம் அலைபாயும் சில நேரம். துன்பம் தொடர்ந்தாலும், வேண்டியதை எல்லாம் அருளுகின்ற, எந்நாளும், நாம் காணும் அன்னை ஸ்ரீ மதுரகாளி அருள்பெற்று வாழ்வோம். சம்சாரம், பாப கர்ம என்னும் இருளால் பாதிக்கப்படாமல் பிரகாசிக்க நமஸ்காரம் செய்கிறேன். ஞானம் ஏற்பட இந்த உலகமானது சிறப்பு வாய்ந்த அன்னை ஸ்ரீ மதுரகாளியால் காக்கப்படுகிறது. ஒப்பற்ற பேரின்ப ஒளியால் பிரகாசிக்கிறது. உனது பாதத்தையே நம்பியிருக்கும் என்னை காக்க வேண்டும். என்னிக்கானும் ஒருநாள் நிச்சயம் நல்ல தெய்வ பக்தி சாதிக்கும்.

25th July, 2016

ஸ்ரீ மதுராம்பிகையம்மாயைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், இக சுகங்களையும் கொடுத்து, மோக்ஷத்தையும் கொடுப்பாள் என்பதே உண்மை. நல்லபடியாக வாழ ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்யுங்கள். ஒருநாள் என் கனவில் வந்தாள். நலமா என்றாள். எனக்கான நேரத்தை முடிவு செய் என்றேன். தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை என்றேன். கலகலவென சிரித்தாள். காட்சி அளிக்கிறாயே என்று என்னுள் தோன்றியது. எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.

26th July, 2016

கலியுகத்திலே தான் வந்து அவதரித்தது தன்னுடைய சங்கல்பத்தினாலே என்று அழகாக எடுத்துக் காட்டுகிறாள். அவதார பிரயோஜனம் துஷ்டர்களை சிக்ஷிப்பதற்கும் பக்தர்களை, ஒரு நிஜ பக்தனுக்குக் கெடுதல் ஏற்பட்டால் ரக்ஷிப்பதற்கும் என்கிறாள். நிதர்சனமாக எடுத்துக் காட்டுகிறாள். உன் துணை நாடி வந்தால் தாயே துயரங்கள் வந்தாலும் உந்தன் பார்வையாலே போக்கி அருளிடுவாய், காத்திடுவாய் நீயே. வாய் திறந்து அழைத்திடும் முன் உன்னருளை தருவாய் நீயே உன் பிள்ளை என்னை காத்திடு. தியானம் நம் லக்ஷியம். அன்னை ஸ்ரீ மதுரகாளி அம்பாளை, பிரதி தினமும் விச்ராந்தியாக தியானம் செய்யப் பழகவேண்டும். பக்தி உபாஸனை, தியானம் எல்லாம் ஒன்றுக்கொன்று விரோதமில்லை. நிறைய அநுஷ்டானங்களைச் செய்து கொண்டேயிருக்க வேண்டும்.

27th July, 2016

கண்ணை கவரும் சிறுவாச்சூர் (அன்னை குடி கொண்டு இருக்கும் தலம்) சுந்தர மதுர மாகாளி மீது பக்தி நமக்கு இருக்கவேண்டும். எனக்கு நீதாம்மா எல்லாமே என்று சரணாகதி அடையவேண்டும். கண்களை மூடி அனுதினம் ஆழ்ந்த தியானம் இருந்து பொன்னான நகைகள் சூடும் அம்பிகையின், ஒரு தாயைப் போல், நாமங்களைக் கூறிக் கொண்டு, மலர் கொண்டு அர்ச்சித்து, தற்போது எல்லா சாஸ்த்ரங்களும் அறிந்த சில பக்தர்கள் வழிபாடுகளில் சுயநலமின்றி உலக நடப்பையும் தெரிந்து கொள்ளாமல் வாழ்கிறார்கள். வெளியே போகவே வேண்டாம். பிரத்யட்சமாக அருளைத் தந்து அறியாமை விலகி வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகளெல்லாம் கிடைக்கச் செய்வாள். அகில புவனங்களையும் படைத்தும், காத்தும் விளையாடும் அந்த ஆதி பராசக்தி சிறுவாச்சூர் சுந்தர மதுர மாகாளி. சௌந்தர்யமான மதுரகாளி உருவம். தன்னை வணங்குபவர்களின் துன்பம் நீக்கி இன்பம் அளிக்கும் ஸ்ரீ சுந்தர மதுரகாளி அந்த பராசக்தி. அன்னை காளி என்றாலும் சாந்த ரூபத்தில் அன்னையை தரிசித்தவுடன் நம் பாவமெல்லாம் விலகுகின்றன. இப்புராதன ஆலயம் அரசினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய் தீது நன்மையெல்லாம் – நின்றன் செயல்களின்றி இல்லை போதும் இந்த மாந்தர் வாழும் பொய்மை வாழ்க்கையெல்லாம் ஆதி சக்தி தாயே – என் மீது அருள் புரிந்து காப்பாய். -- மஹாகவி பாரதியார். அம்மையின் அபிஷேக மஞ்சள் பெற்றால் தீராத வினை தீரும். பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு அக்குறை விலகும். அன்னையின் குங்குமம் பெற்றாலே முக்தி. அன்னைக்கு உகந்த வெள்ளிக் கிழமைகளிலே ஆயிரம் ஆயிரமாம் பக்தர் கூட்டம் அலை கடல் என பொங்கி வந்து அன்னையை பணிகின்றனர். அதுவும் ஆடி மற்றும் தை வெள்ளிகளில் அன்னையை தரிசிக்கும் அன்பர் பல கோடி. தாங்களும் எல்லா நலமும் வளமும் பெற சிறுவாச்சூர் சுந்தர மதுர காளிகாம்பாளை வந்து தரிசனம் செய்து தான் பாருங்களேன் கேட்ட வரம் தருவாள் அம்மன்.

Thursday, July 21, 2016

அஷ்டோத்தரசத நாமாவளி

3
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதீச்வர
ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி
அஷ்டோத்தரசத நாமாவளி:


ஓம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதீச்வராய நம:
ஓம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி குருப்யோ நம:
ஓம் ஸன்யாஸாச்ரம சிகராய நம:
ஓம் காஷாய தண்ட தாரிணே நம:
ஓம் ஸர்வபீடாபஹாரிணே நம:
ஓம் ஸ்வாமிநாத குரவே நம:
ஓம் கருணாஸாகராய நம:
ஓம் ஜகதாகர்ஷண சக்திமதே நம:
ஓம் ஸர்வ சராசர ஹ்ருதயஸ்தாய நம:
ஓம் பக்த பரிபாலக ச்ரேஷ்டாய நம:
ஓம் தர்ம பரிபாலகாய நம:
ஓம் ஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வத்யாசார்யாய நம:
ஓம் ஸ்ரீ விஜயேந்த்ர ஸரஸ்வதி பூஜிதாய நம:
ஓம் சிவ சக்தி ஸ்வரூபகாய நம:
ஓம் பக்த ஜன ப்ரியாய நம:
ஓம் ப்ரம்ம விஷ்ணு சிவைக்ய ஸ்வரூபாய நம:
ஓம் காஞ்சீ க்ஷேத்ர வாஸாய நம:
ஓம் கைலாஸ சிகர வாஸாய நம:
ஓம் ஸ்வதர்ம பரிபோஷ காய நம:
ஓம் சாதுர் வர்ண்ய ரக்ஷகாய நம:
ஓம் லோக ரக்ஷித ஸங்கல்பாய நம:
ஓம் ப்ரஹ்ம நிஷ்டாபராய நம:
ஓம் ஸர்வ பாப ஹராய நம:
ஓம் தர்ம ரக்ஷக ஸந்துஷ்டாய நம:
ஓம் பக்தார்ப்பி்த தன ஸ்வீகர்த்ரே நம:
ஓம் ஸர்வோபநிஷத் ஸாரஞ்ஞாய நம:
ஓம் ஸர்வ சாஸ்த்ர கம்யாய நம:
ஓம் ஸர்வ லோக பிதாமஹாய நம:
ஓம் பக்தாபீஷ்ட ப்ரதாயகாய நம:
ஓம் ப்ரம்மண்ய போஷகாய நம:
ஓம் நானாவித புஷ்பார்ச்சித பதாய நம:
ஓம் ருத்ராக்ஷ கிரிட தாரிணே நம:
ஓம் பஸ்மோத் தூளித விக்ரஹாய நம:
ஓம் ஸர்வக்ஞாய நம:
ஓம் ஸர்வ சராசர வ்யாபகாய நம:
ஓம் அநேக சிஷ்ய பரிபாலகாய நம:
ஓம் மனஸ்சாஞ்சல்ய நிவர்த்தகாய நம:
ஓம் அபய ஹஸ்தாய நம:
ஓம் பயாபஹாய நம:
ஓம் யக்ஞ புருஷாய நம:
ஓம் யக்ஞாநுஷ்டான ருசிப்ரதாய நம:
ஓம் யக்ஞ ஸம்பன்னாய நம:
ஓம் யக்ஞ ஸஹாயகாய நம:
ஓம் யக்ஞ பலதாய நம:
ஓம் யக்ஞ ப்ரியாய நம:
ஓம் உபமான ரஹிதாய நம:
ஓம் ஸ்படிக துளஸீருத்ராக்ஷ ஹார தாரிணே நம:
ஓம் சாதுர்வர்ண்ய ஸமத்ருஷ்டயே நம:
ஓம் ருக் யஜுஸ் ஸாமாதர்வண சதுர்வேத ஸம்ரக்ஷகாய நம:
ஓம் தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபாய நம:
ஓம் ஜாக்ர ஸ்வப்ன ஸூஷுப்தயவஸ்வாதீதாய நம:
ஓம் கோடி ஸுர்யதுல்ய தேஜோமயசரீராய நம:
ஓம் ஸாதுஸங்க ஸம்ரக்ஷகாய நம:
ஓம் அச்வ கஜ கோ பூஜா நிர்வர்த்தகாய நம:
ஓம் குருபாதுகா பூஜா துரந்தராய நம:
ஓம் கனகாபிஷிக்தாய நம:
ஓம் ஸ்வர்ண பில்வதள பூஜிதாய நம:
ஓம் ஸர்வ ஜீவ மோக்ஷதாய நம:
ஓம் மூகவாக்தான நிபுணாய நம:
ஓம் நேத்ர தீக்ஷாதானாய நம:
ஓம் த்வாதசலிங்க ஸ்தாபகாய நம:
ஓம் கான ரஸஞ்ஞாய நம:
ஓம் ப்ரஹ்ம ஞானோபதேசகாய நம:
ஓம் ஸகலகலா ஸித்திதாய நம:
ஓம் சாதுவர்ண்ய பூஜிதாய நம:
ஓம் அநேகபாஷா ஸம்பாஷண கோவிதாய நம:
ஓம் அஷ்டஸித்திப்ரதாயகாய நம:
ஓம் ஸ்ரீ சாரதாமட ஸுஸ்திதாய நம:
ஓம் நித்தியான்னதான ஸுப்ரீதாய நம:
ஓம் ப்ரார்த்தனாமாத்ர ஸுலபாய நம:
ஓம் பாதயாத்ரா ப்ரியாய நம:
ஓம் நானாவிதமத பண்டிதாய நம:
ஓம் சுருதி ஸ்ம்ருதி புராணஞ்ஞாய நம:
ஓம் தேவ யக்ஷ கின்னர கிம்புருஷ பூஜ்யாய நம:
ஓம் ச்ரவணானந்தகர கீர்த்தயே நம:
ஓம் தர்சனானந்தாய நம:
ஓம் அத்வைதானந்த பரிதாய நம:
ஓம் அவ்யாஜ கருணா மூர்த்தயே நம:
ஓம் சைவவைஷ்ணவாதி மான்யாய நம:
ஓம் சங்கராசார்யாய நம:
ஓம் தண்ட கமண்டலு ஹஸ்தாய நம:
ஓம் வீணாம்ருதங்காதி ஸகலவாத்யநாத ஸ்வரூபாய நம:
ஓம் ராமகதா ரஸிகாய நம:
ஓம் வேத வேதாங்க ஆகமாதி ஸகலகலா ஸதஸ் ப்ரவர்தகாய நம:
ஓம் ஹ்ருதய குஹாசயாய நம:
ஓம் சதருத்ரீய வர்ணித ஸ்வரூபாய நம:
ஓம் கேதாரேஸ்வர நாதாய நம:
ஓம் அவித்யா நாசகாய நம:
ஓம் நிஷ்காம கர்மோபதேசகாய நம:
ஓம் லகுபக்திமார்கோபதேசகாய நம:
ஓம் லிங்கஸ்வரூபாய நம:
ஓம் ஸாலக்ராம ஸூக்ஷ்மஸ்வரூபாய நம:
ஓம் காலட்யாம் சங்கரகீர்த்திஸ்தம்ப நிர்மாண கர்த்ரே நம:
ஓம் ஜிதேந்த்ரியாய நம:
ஓம் சரணாகதவத்ஸலாய நம:
ஓம் ஸ்ரீ சைலசிகரவாஸாய நம:
ஓம் டம்ரிகநாத விநோதனாய நம:
ஓம் வ்ருஷபாரூடாய நம:
ஓம் துர்மதநாசகாய நம:
ஓம் ஆபிசாரிகதோஷ ஹர்த்ரே நம:
ஓம் மிதாஹாராய நம:
ஓம் ம்ருத்யுவிமோசன சக்தாய நம:
ஓம் ஸ்ரீசக்ரார்ச்சன தத்பராய நம:
ஓம் தாஸாநுக்ரஹ க்ருதே நம:
ஓம் அனுராதா நக்ஷத்ர ஜாதாய நம:
ஓம் ஸர்வலோக க்யாதசீலாய நம:
ஓம் வேங்கடேச்வர சரணபத்மஷ்டபதாய நம:
ஓம் ஸ்ரீ த்ரிபுரசுந்தரி ஸமேத ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர பூஜாப்ரியாய நம:

மஹாஸ்வாமி பாத அஷ்டோத்தர சதநாமாவளி ஸம்பூர்ணம்.